தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்லுாரியில் பாவை விழா

 கல்லுாரியில் பாவை விழா

 கல்லுாரியில் பாவை விழா


ADDED : ஜன 20, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் பாவை விழா நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். பேராசிரியர் கவிதா அறிமுக உரையாற்றினார். செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பேசினார். பாவை பாடல் ஒப்புவித்தல், இசையோடு பாடுதல், நடனம், நாடகம், கோலம், ஓவியம், வினாடி-- வினா போன்ற போட்டிகளில் 16 கல்லுாரிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் துறை மாணவர்கள் 'சாம்பியன்' பட்டம் வென்றனர். உதவி பேராசிரியர் கிருத்திகா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us