UPDATED : நவ 30, 2026 12:44 AM
ADDED : நவ 30, 2026 12:44 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: தியாகராசர் பொறியியல் கல்லுாரி, தொழில், கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, 2026ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தொழில், கல்வி நிறுவன கூட்டமைப்பின் தேசிய தங்க விருது கிடைத்துள்ளது.
டில்லியில் நவ. 27ல் நடந்த சி.ஐ.ஐ. தொழில்-கல்வி நிறுவனங்களுக்கான உலகளாவிய உச்சி மாநாட்டில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முதல்வர் அசோக்குமார் விருதைப் பெற்றார்.
தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன் பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவது, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பங்களித்தல் போன்ற காரணங்களுக்காக இவ் விருது கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
