ADDED : மார் 29, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம்., பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில், எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் கைரானிக்ஸ்'26 தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
தமிழகம் முழுதும் 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள், புதிய தொழில்நுட்ப படைப்புகளை காட்சிப்படுத்தினர். கல்லுாரி முதல்வர் துரைராஜ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் தார்சிஸ் நன்றி கூறினார்.
எஸ்.ஆர்.எம்., மதுரை தலைவர் பத்மபிரியா, கல்லுாரி தாளாளர் ஹரிணி, கல்வி, நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றனர்.
