sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்

/

எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்

எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்

எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்


ADDED : மார் 06, 2026 11:48 AM

Google News

ADDED : மார் 06, 2026 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: கல்லூரி மாணவரால் கம்பியால் தாக்கப்பட்ட எஸ்ஐ அழகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் கீழத்தெரு அழகர்சாமி மகன் ஹரி 24. இவர் திருமங்கலம் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் அவரது தாயாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்.

அப்போது ரோந்து சென்ற பேரையூர் எஸ்ஐ அழகர் இதை தடுத்தார். அப்போது அருகில் இருந்த கார் கம்பியை பிடுங்கி எஸ்.ஐ தலையில் ஹரி தாக்கினார். இதில் காயமடைந்த எஸ்ஐ அழகர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us