/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
1297 பள்ளிகளில் 'சிலாஸ்' தேர்வு; கல்லுாரி மாணவர்கள் நடத்தினர்
/
1297 பள்ளிகளில் 'சிலாஸ்' தேர்வு; கல்லுாரி மாணவர்கள் நடத்தினர்
1297 பள்ளிகளில் 'சிலாஸ்' தேர்வு; கல்லுாரி மாணவர்கள் நடத்தினர்
1297 பள்ளிகளில் 'சிலாஸ்' தேர்வு; கல்லுாரி மாணவர்கள் நடத்தினர்
ADDED : பிப் 06, 2025 06:10 AM
மதுரை; மதுரையில் 1297 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு தேர்வு (எஸ்.எல்.ஏ.எஸ்.,) நடந்தது. இத்தேர்வை முதன்முறையாக கல்லுாரி மாணவர்கள் நடத்தினர்.
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள் குறித்த புரிதல் திறனை ஆராயும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 3, 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 'சிலாஸ்' தேர்வு நடத்தப்படும். இதுவரை ரேண்டமாக பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடந்த நிலையில் இந்தாண்டு அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளிலும் தலா 20 மாணவர்களுக்கு இத்தேர்வு நடக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களின் அடிப்படை புரிதல் குறித்து ஆராயப்படும். மாவட்டத்தில் 3, 5 ம் வகுப்புகளுக்கு இத்தேர்வு நடந்த நிலையில் இன்று (பிப்.6) எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவுள்ளது.
ஏற்பாடுகளை சி.இ.ஓ., ரேணுகா தேவி, டி.கல்லுப்பட்டி மாநில ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (டயட்) முதல்வர் சவுந்திரராஜன், உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன் உள்ளிட்டோர் செய்தனர்.
சவுந்திரராஜன் கூறுகையில், மாணவர்கள் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் இதற்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, ஒன்றரை மணிநேரம் நடந்தது. இதற்காக கல்வி ஒன்றியங்கள் வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளி மையங்களில் இருந்து வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. புகாரின்றி இத்தேர்வை நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.