ADDED : மார் 24, 2026 11:13 PM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி கண்மாய் பகுதி விவசாயிகள் பலர் முருங்கை விவசாயம் செய்கின்றனர். வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை காய்கள் சிவப்பு நிறமாக வருகிறது.
விவசாயிகள் கூறியதாவது: பனிக்காலத்தில் காய்கள் காய்க்கவில்லை. சமீபகாலமாக காய்கள் வளர்கின்றன. ஏராளமான மரங்களில் பாதிக்கும் மேற்பட்ட காய்கள் சிவப்பு நிறமாக வருகிறது. மருந்து அடித்தும் பலன் இல்லை. நிறம் மாறுவதற்கான காரணமும் தெரியவில்லை. தற்போது விளைச்சல் அதிகமாக இருந்தும் விலையும் இல்லை. காய்களும் நிறம் மாறி வருவதால் நஷ்டம் அடைகிறோம். இந்த காய்களை கால்நடைகளும் சாப்பிடுவது இல்லை. அதனால் நிறம் மாறி வளரும் காய்களை குப்பையில் கொட்டுகிறோம் என்றனர்.
