ADDED : அக் 01, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோட்ட வணிகவரித்துறை ஓய்வு அலுவலர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பொன்முடி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். துணைத் தலைவர் ஹரிகரன் வரவேற்றார்.
நிர்வாகிகள் தம்பித்துரை, சண்முகம், ஆறுமுகம் உட்பட பலர் பேசினர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர். கூட்டத்தில், 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். 75 வயது நிறைவடைந்தோரை கவுரவிக்க வேண்டும். சங்கத்திற்கு நிரந்தர இடம், கட்டடம் உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.