/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோக முறையில் மாற்றம் பொறியாளர்களுடன் கமிஷனர் ஆலோசனை

ADDED : பிப் 10, 2025 04:48 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் நடைமுறையில் உள்ள குடிநீர் வினியோக முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் கமிஷனர் சித்ரா ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் சேகர், பாக்கியலட்சுமி பங்கேற்றனர். மாநகராட்சி பகுதிக்கு தற்போது வைகையில் இருந்து வரும் குடிநீர், மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்படாமல் 'கிராவிட்டி' முறையில் வால்வுகள் கன்ட்ரோல் அடிப்படையில் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதனால் நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பயனின்றி உள்ளன. ஒரு பகுதியில் குடிநீர் வினியோகத்தின் போது, மற்றொரு பகுதிக்கு தண்ணீர் கிடைக்காதது, குடிநீர் திருட்டு, விரயம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த வினியோக முறையை நெறிப்படுத்தும் வகையில், தொட்டிகளில் குடிநீரை ஏற்றி சீராக வினியோகம் செய்வது குறித்து கமிஷனர் ஆலோசனை நடத்தினார். ரோடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை டெண்டர் விடுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றனவா என்பது குறித்து வார்டுகள் வாரியாக பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.