/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் 1600 கி.மீ.,க்கு ரோடுகள் அமைக்கும் பணி ஜனவரியில் துவங்கும்; கமிஷனர் தினேஷ் குமார் தகவல்

ADDED : டிச 15, 2024 05:39 AM

மதுரை : 'மாநகராட்சியில் 1600 கி.மீ.,க்கு ரோடுகள் அமைக்கும் பணி ஜன., 2வது வாரத்தில் துவங்கும்' என மதுரையில் நடந்த திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில் தலைவர் சண்முக சுந்தரம் வரவேற்றார்.
ஆரப்பாளையத்தில் இருந்து ரயில்வே காலனி வழியாக செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும். ஓட்டல்கள் தங்கள் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பையில் நிரப்பி மாநகராட்சியிடம் இரவு 11:00 மணிக்கு மேல் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
கமிஷனர் தினேஷ் குமார் பேசியதாவது:
ஞாயிற்றுக் கிழமையும்வீடுவீடாக குப்பை சேகரிக்கவும்,ஈரக்கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து வேளாண் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும்நடவடிக்கை எடுக்கப்படும்.ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளைபிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்களை நியமித்துள்ளோம். பிடிபட்ட மாடுகள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.தினமும் 30 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. தெருநாய்களை தத்தெடுக்க ஊக்கப்படுத்துகிறோம்.
மாநகராட்சியில் கூட்டுக்குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்காக 1600 கி.மீ., ரோடுகள்தோண்டப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஜனவரி2வது வாரத்தில் ரோடுகள் அமைக்கும் பணி துவங்கும். ஆகஸ்ட் மாதத்திற்குள் மாநகராட்சி முழுவதும்பணிகள் முழுமை பெறும்.விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைபணிகள் அடுத்த வாரத்தில் துவங்கும் என்றார்.
நகர்நல சுகாதார அலுவலர் இந்திரா,உதவி நகர்நல சுகாதார அலுவலர் அபிஷேக், அசோசியேஷன் செயலாளர் சாய் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். துணைத் தலைவர் முத்து வேலாயுதம் நன்றி கூறினார்.