தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விபத்தை தடுக்க 263 சந்திப்புகளில் தடுப்புகள் கமிஷனர் தகவல்

 விபத்தை தடுக்க 263 சந்திப்புகளில் தடுப்புகள் கமிஷனர் தகவல்

 விபத்தை தடுக்க 263 சந்திப்புகளில் தடுப்புகள் கமிஷனர் தகவல்


ADDED : ஜன 25, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் கட்டுரை, ஓவியப் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் லோகநாதன் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது பள்ளி மாணவி சோர்வுடன் இருந்ததை பார்த்து விசாரித்தார். தனது ஓவியத்திற்கு பரிசு கிடைக்கவில்லை என்றுக்கூற, சிறப்பு பரிசு வழங்கினார். போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை பார்த்தபோது மாணவி ஒருவர் எழுதிய வாசகங்கள் சிறப்பாக உள்ளதாக பாராட்டி அதனை போக்குவரத்து விழிப்புணர்வுக்கு பயன்படுத்த அறிவுறுத்தினார்.

அவர் கூறுகையில், ''நகரில் 60 சதவீதம் டூவீலர்களாலும், 30 சதவீதம் நடந்து செல்பவர்களாலும் சாலை விபத்து நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 263 சந்திப்பு பகுதிகளில் உள்ள சாலைகளின் மத்தியில் தடுப்பு அமைத்துள்ளதால் விபத்தும், உயிரிழப்பும் குறைந்துள்ளது'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us