/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்
/
கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்
ADDED : ஜூலை 20, 2025 04:52 AM

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியின் 49வது பட்டமளிப்பு விழா நடந்தது. இளநிலை பிரிவில் 943 பேர், முதுநிலை பிரிவில் 298 பேர், தொழில்முறை பிரிவில் 142 பேர் என மொத்தம் 1383 மாணவிகளுக்கு காரைக்குடிஅழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி பட்டம் வழங்கி பேசியதாவது:
பெண்கள் உயர்கல்வி பெறுவது கட்டாயம். கல்வியை எதிர்காலத்திற்கான திறவுகோலாக பார்க்க வேண்டும். உயர்கல்விக்கு பின் மூன்றுவித வாய்ப்புகள் உள்ளன. தொழில்முனைவோர் ஆகலாம், அரசுப்பணிக்கு செல்லாம், ஆராய்ச்சித்துறையில் பயணிக்கலாம். போட்டி நிறைந்த இவ்வுலகில் இளைஞர்கள் கம்யூனிகேஷன் திறன்வளர்த்து கொண்டால்எந்த துறையிலும் சாதிக்கலாம் என்றார்.
கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜோஸ்பின் நிர்மலா மேரி, பேராசிரியர் ஜெர்மைன் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.