நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 100 கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஷீலா ராணி தலைமையில் நடந்தது.
நகராட்சி தலைவர் ரம்யா நடத்தி வைத்தார். துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் ரம்ஜான் பேகம், சின்னச்சாமி, வீரக்குமார், ரவி, மங்களகவுரி, நகராட்சி மருத்துவ அலுவலர் ஆயிஷா, செக்கானுாரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அதிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

