/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தான் பள்ளிக்கு சமூக விருப்ப விருது
/
சோழவந்தான் பள்ளிக்கு சமூக விருப்ப விருது
ADDED : அக் 26, 2024 05:21 AM
சோழவந்தான்: சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி உலகின் சிறந்த பள்ளிகளுக்கான பரிசில் 2024ல் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருது பெற்றது.
உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்ற 50 பள்ளிகளில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி அதிக மக்கள் வாக்குகளை பெற்று சமூக விருப்ப விருதை வென்றுள்ளது. இதன் மூலம் பள்ளிக்கு சிறந்த பணியிடமாக திகழ ஆசிரியர் நலனை மேம்படுத்துவதற்கு சிறந்த கல்வியாளர்களை ஈர்க்கவும் வேலை நேரலை மேம்படுத்தவும் உதவும் 'டி4 எஜுகேஷனின் பெஸ்ட் ஸ்கூல் டு ஒர்க்' உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த பள்ளி விருதுகளின் நிறுவனர் விகாஸ் வாழ்த்தி பேசினார். உலக பள்ளிகள் உச்சி மாநாடு 2024 வெற்றியாளர்களும், இறுதி சுற்று போட்டியாளர்களும் நவம்பர் 23, 24ல் துபாயில் நடக்கும் உலக பள்ளிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.