/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லோக்அதாலத்தில் 6509 வழக்குகளில் இழப்பீடு ரூ.46 கோடி
/
லோக்அதாலத்தில் 6509 வழக்குகளில் இழப்பீடு ரூ.46 கோடி
லோக்அதாலத்தில் 6509 வழக்குகளில் இழப்பீடு ரூ.46 கோடி
லோக்அதாலத்தில் 6509 வழக்குகளில் இழப்பீடு ரூ.46 கோடி
ADDED : டிச 14, 2025 06:38 AM

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 6509 வழக்குகளில் ரூ.46 கோடியே 94 லட்சத்து 92 ஆயிரத்து 987 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஆர்.கலைமதி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சொக்கலிங்கம், தாரணி, சிவசுப்பிரமணியன், மதுர சேகரன், இளங்கோ, வழக்கறிஞர்கள் சாமிதுரை, கணபதி சுப்பிரமணியன், ஜெய இந்திரா பட்டேல், அரசு டாக்டர் சரவணமுத்து விசாரித்தனர்.
301 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 33 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.6 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரத்து 16 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் (நீதித்துறை) அய்யப்பன் ஏற்பாடு செய்திருந்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தார்.
மாவட்ட அளவில் 24 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூர் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், செங்கமலச்செல்வம், நாகலட்சுமி, ஜான் சுந்தர் லால் சுரேஷ், ஸ்ரீதேவி, சார்பு நீதிபதிகள் சரவணபவன், காயத்ரிதேவி, ராம் கணேஷ், சரவண செந்தில்குமார் மற்றும் நீதித்துறை நடுவர்கள், சிவில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
மொத்தம் 6533 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 6476 ல் தீர்வு காணப்பட்டது. ரூ.40 கோடியே 13 லட்சத்து 56ஆயிரத்து 971 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் 371 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 39 சிவில், 124 காசோலை மோசடி வழக்குகள் அடங்கும்.
10 குடும்பநல வழக்குகளில் தம்பதியினர் இடையே சமரசம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார்.

