ADDED : செப் 15, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சமூகப்பணித்துறை சார்பில் மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடந்தன.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு, மாணவர் நலன் முதன்மையர் அழகேசன் முன்னிலை வகித்தனர். சமூகப்பணித்துறை தலைவர் சிலம்பரசன் வரவேற்றார். தொழிலதிபர் மதி வெங்கடேஷ் பேசினார். 47 கல்லுாரிகளைச் சேர்ந்த 1124 மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை மடோனா கல்லுாரி முதல் பரிசு, திருநெல்வேலி மரியா கல்லுாரி 2ம் பரிசு, திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை 3ம் பரிசு வென்றன. பேராசிரியர் ஆல்பர்ட்டா, மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் டயனா வின்சிலா நன்றி கூறினார்.
