/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின் மோட்டார்கள் மாயம் புகார்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
மின் மோட்டார்கள் மாயம் புகார்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
மின் மோட்டார்கள் மாயம் புகார்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
மின் மோட்டார்கள் மாயம் புகார்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : பிப் 22, 2024 06:37 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் மின் மோட்டார்கள் மாயமாகும் சர்ச்சை குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக மின் மோட்டார்கள் பழுதுநீக்கும் பண்டகசாலைகளில் கமிஷனர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு நடத்தினார்.
மாநகராட்சி வார்டுகளில் போர்வெல் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் பணிக்காக பயன்படும் மின் மோட்டார்கள் பழுது என்ற பெயரில் 'கண்டம்' என கணக்கிடப்பட்டு தனியாருக்கு விற்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மண்டலம் 4 அலுவலகத்தில் கமிஷனர் ஆய்வு செய்து மோட்டார்கள் இருப்பு, பராமரிப்பில் உள்ளவை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.
உடன் உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், கமிஷனர் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
கமிஷனர் கூறியதாவது: மின் மோட்டார்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது. வார்டுகளில் குப்பை, குடிநீர், பாதாளச் சாக்கடை பிரச்னை, தெரு விளக்குகள் எரியாதது தொடர்பான மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். வார்டுகளில் தெரு விளக்குகள் பற்றாக்குறை உள்ளது. 10 ஆயிரம் புதிய விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.