தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கால்வாயை சேதப்படுத்தி காம்பவுண்ட் சுவர்

கால்வாயை சேதப்படுத்தி காம்பவுண்ட் சுவர்

கால்வாயை சேதப்படுத்தி காம்பவுண்ட் சுவர்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: இ.மலம்பட்டியில் நீர்வளத்துறை கால்வாயின் ஒரு பகுதி மற்றும் கிளைக் கால்வாயை சேதப்படுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை 12 வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதில் தனியா மங்கலத்தில் இருந்து 11-வது கால்வாய் வழியாக இ.மலம்பட்டி எறிச்சி, குறிச்சி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஜெயங்கொண்ட நிலை விலக்கருகே, பாசன கால்வாயை சேதப்படுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டப்படுகிறது.

அப்பகுதி விவசாயி கண்ணன் கூறியதாவது : கால்வாயின் ஒரு பக்க சுவர், மடையை உடைத்தும், சின்ன பனையன் குளத்திற்கு செல்லும் கால்வாயை நிரந்தரமாக மூடியும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படுகிறது. இதனால் 200 க்கும் ஏக்கருக்கும் மேல் தரிசாகும் அவலம் உள்ளது.

இப் பிரச்னை குறித்து ஒரு வாரத்திற்கு முன் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீர்வளத்துறை எஸ்.டி.ஓ., சுபாஷினி உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எட்டு நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு சொத்தை பாதுகாப்பதில் அலட்சியம் உள்ளது. நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.

எஸ்.டி.ஓ., சுபாஷினி கூறுகையில், ''எங்கள் கால்வாயை யாரும் அழிக்க விடமாட்டோம். இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us