/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆவின் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் ஜப்தி
/
ஆவின் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் ஜப்தி
ADDED : பிப் 19, 2026 05:46 AM
மதுரை: மதுரை ஆவினில் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாததால் கம்ப்யூட்டர்கள் ஜப்தி செய்யப்பட்டன.
ஆவின் மெயின் அலுவலகத்தில் 1985 முதல் பணியாற்றிய 23 பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி கூட்டுறவு ஊழியர் சங்கம் (சி.ஐ.டியு.,) சார்பில் தொழிற்சாலை ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டு 1996ல் நிரந்தரம் செய்ய உத்தரவு பெறப்பட்டது. ஆனால் நிர்வாகம் மேல்முறையீடு சென்றது.
அதை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நிரந்தர பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் வழங்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட ஆவின் மேல்முறையீடும் தள்ளுபடியானது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் 'நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத ஆவினில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதன்படி தொழிலாளர் நீதிமன்ற ஊழியர் இருவர் நேற்று ஆவின் அலுவலகம் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சு நடத்தினர். முடிவு எட்டாததால் 30 கம்ப்யூட்டர்கள், ஒரு ஏ.சி.,யை ஜப்தி செய்து வேனில் ஏற்றினர். மீண்டும் பேச்சு நடந்தது.

