/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
10 தொகுதிகளுக்கு காங்., பொறுப்பாளர் நியமனம்
/
10 தொகுதிகளுக்கு காங்., பொறுப்பாளர் நியமனம்
ADDED : ஜன 20, 2025 05:29 AM
மதுரை: மதுரையில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் காங்., சார்பில் தொகுதிக்கு தலா 2 பொறுப்பாளர்களை மாநில தலைமை நியமித்துள்ளது.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கவும், சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காகவும் தொகுதி வாரியான பொறுப்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டுள்ளது. இதன்படி மதுரையில் மேலுார் - இளங்கோவன், திலகராஜ், கிழக்கு - நுார் முகமது, முருகன், சோழவந்தான் - செல்லப்பா சரவணன், ராமன், வடக்கு - துரையரசன், ராஜாமுகமது, தெற்கு - செய்யது பாபு, மலர் பாண்டியன், மத்தி - பாலு, பால்ஜோசப், மேற்கு - போஸ், காமராஜ், திருப்பரங்குன்றம் - பழனிகுமார், காமாட்சி, திருமங்கலம் - உலகநாதன், சுப்பிரமணியன், உசிலம்பட்டி - விஜயபிரபாகர், சரவணகுமார். இப்பொறுப்பாளர்கள் லோக்சபா ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.