/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்கிரஸ் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
/
காங்கிரஸ் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜன 08, 2024 04:48 AM
உசிலம்பட்டி, : செல்லம்பட்டியில் காங்., கட்சி சார்பில், செல்லம்பட்டி வட்டார பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வட்டாரத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
மதுரை தெற்கு மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் ராமகண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயபிரபாகர், பொன்மணிகண்டன், எழுமலை வட்டாரத் தலைவர் புதுராஜா, சேடபட்டி வட்டாரத் தலைவர் ஜெயராஜ், உசிலம்பட்டி நகர தலைவர் மகேந்திரன், திருமங்கலம் வடக்கு வட்டாரத் தலைவர் வீரபத்திரன் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் ராகுல் பிரதமராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.