/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை விமான நிலைய விரிவாக்கம் விஜய் மீது காங்., எம்.பி., தாக்கு
/
மதுரை விமான நிலைய விரிவாக்கம் விஜய் மீது காங்., எம்.பி., தாக்கு
மதுரை விமான நிலைய விரிவாக்கம் விஜய் மீது காங்., எம்.பி., தாக்கு
மதுரை விமான நிலைய விரிவாக்கம் விஜய் மீது காங்., எம்.பி., தாக்கு
ADDED : நவ 22, 2024 04:49 AM
திருநகர்: மதுரை விமான நிலைய விரிவாக்க பிரச்னையில் உண்மைத்தன்மை அறியாமல் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் சென்னையில் அமர்ந்து அறிக்கை விடுகின்றனர் என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் வந்தால் அரிட்டாபட்டியின் தமிழ் வரலாற்றையும், அழகர் கோவிலையும் பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இத் திட்டம் மதுரைக்கு வளர்ச்சியை கொடுக்கும் என சிலர் கதை கட்டி விடலாம். அது முற்றிலும் தவறு. நவ. 25ல் துவங்கும் பார்லி., கூட்டத்தொடரில் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகளில் எதுவும் செய்யாததால் தான் விமான நிலைய விரிவாக்க பிரச்னை தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. மதுரைக்கு 24 மணி நேர விமான சேவை திட்டம் துவக்கப்பட்ட போதிலும் விமானங்கள் வருகை இல்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பிரச்னையில் உண்மைத்தன்மை அறியாமல் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் சென்னையில் அமர்ந்து அறிக்கை விடுகின்றனர். நேரில் பார்த்தால்தான் உண்மை அவர்களுக்கு புரியும் என்றார்.