/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்., மாவட்ட தலைவர் பதவியை 'பவர் புல்'லாக மாற்றுகிறார் ராகுல் மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் வருகிறது
/
காங்., மாவட்ட தலைவர் பதவியை 'பவர் புல்'லாக மாற்றுகிறார் ராகுல் மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் வருகிறது
காங்., மாவட்ட தலைவர் பதவியை 'பவர் புல்'லாக மாற்றுகிறார் ராகுல் மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் வருகிறது
காங்., மாவட்ட தலைவர் பதவியை 'பவர் புல்'லாக மாற்றுகிறார் ராகுல் மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் வருகிறது
ADDED : பிப் 12, 2026 06:02 AM
மதுரை: காங்., மாவட்ட தலைவர்கள் பதவி, தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவிக்கு இணையாக 'பவர் புல்'லாக மாற்றப்பட வுள்ளது. மாநில தலைவர்களை தேர்வு செய்யும் அதிகாரம் இனி மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்படும் என டில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த புதிய மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் ராகுல் எம்.பி., நம்பிக்கை அளித்துள்ளார்.
தேசிய அளவில் பா.ஜ.,வின் தொடர் வெற்றியால் அதிர்ச்சியான காங்.,ல், பல்வேறு மாநிலங்களில் மாவட்ட அளவில் செயல்படாத நிர்வாகிகளுக்கு பதில் மேலிட பார்வையாளர்கள் குழு மூலம் புதிய தலைவர்களை தேர்வு செய்தது. தமிழகத்தின் 76 தலைவர்கள் உட்பட அசாம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 500 பேருக்கு, நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது ராகுல் பேசியதாக மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: மாவட்ட தலைவர் பதவி வலுவானதாக மாற்றப்படவுள்ளது. மாநில தலைவர்களை அகில இந்திய தலைமை நேரடியாக நியமிப்பதில் மாற்றம் செய்து, மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்து அகில இந்திய தலைமைக்கு பரிந்துரைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் எம்.எல்.ஏ., எம்.பி., க்கு போட்டியிட விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவர் பரிந்துரை அவசியமாக்கப்படும்.
மாவட்ட தலைவர்கள் மக்கள் போராட்டங்களில் அதிகம் பங்கெடுக்க வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். மாநில கட்சிகள், பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் மாவட்ட தலைவர்கள் செயல்பாடு இருக்க வேண்டும். மகளிரணியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
புதிய தலைவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க டில்லியில் சிறப்பு 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செயல்படும் குழு தினமும் ஒவ்வொரு தலைவரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அகில இந்திய தலைமைக்கு அறிக்கை அளிக்கும்.
இந்த அறிக்கைப்படியே எம்.எல்.ஏ., எம்.பி., மாநில தலைவர் பதவிகளுக்கு டில்லி தலைமை வாய்ப்பளிக்கும். மாவட்ட தலைவர் பதவி முழு அதிகாரம் படைத்த பதவியாக மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ராகுலுடன் புதிய தலைவர்கள் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றனர்.

