ADDED : டிச 25, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : அம்பேத்கரை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காங்., நிர்வாகிகள், 'கலெக்டர் தான் எங்கள் மனுவை பெற வேண்டும்' என தர்ணாவில் ஈடுபட்டனர்.
நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் முன்னாள் எம்.பி., விஸ்வநாதன், வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் பாண்டி, நிர்வாகிகள் செய்யதுபாபு, மீர்பாட்ஷா, போஸ், ரவி, கவுன்சிலர்கள் முருகன், ராஜ்பிரதாப், உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர்.
'கூடுதல் கலெக்டரிடம் மனுவை கொடுத்து விட்டு செல்ல சொல்லுங்கள்' என அலுவலர்கள் கூறினர். ஆனால் கலெக்டரிடம் தான் மனு அளிப்போம் என வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் சங்கீதா மனுவை பெற்றார்.