தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணி தாமதம்

 அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணி தாமதம்

 அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணி தாமதம்


ADDED : ஜூன் 19, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு நவீன வசதிகளோடு கூடிய புதிய கட்டடம் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு தி.மு.க., ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டன.

இங்கு 35 படுக்கை வசதிகளோடு கர்ப்பிணி களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், வென்டிலேட்டர், வார்மர், இன்குபேட்டர் உள்ளிட்ட சிசுக்கள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்திய பராமரிப்பு பிரிவு என பல்வேறு வசதிகளோடு கட்டப்பட்டு வருகிறது.

ஓராண்டுக்கு மேலாகியும் 85 சதவீத பணிகளே முடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், குழந்தைகள் உரிய வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us