நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்ட காமராஜ் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது. முதன்மை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கொள்கை பரப்பு அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் உதயகுமார், மாநில செயலாளர் ஐஸ்வர்யா சுரேஷ் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாநில செயலாளர் அரவிந்தன் வரவேற்றார் . நிர்வாகிகள் காசி விஸ்வநாதன், தயாநிதி,ரவிச்சந்திரன், உதயக்குமார், ஜெயபிரகாஷ் பங்கேற்றனர்.
ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வீட்டுவரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை பணிகளை துவக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.