ADDED : பிப் 22, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடுநகர் ஊரமைப்பு சட்டம் 1971 ஐ மறுசீரமைப்பது குறித்தபொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், கலந்துரையாடல் மடீட்சியாவில் நேற்று முன்தினம்நடந்தது. கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்து, நகர் ஊரமைப்பு சட்டம், அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி இயக்குனர் மஞ்சு, கண்காணிப்பாளர் முருகன், மேற்பார்வையாளர் ரங்கதுரை, கட்டட கலை திட்ட உதவியாளர் வாசில் அகமது பங்கேற்றனர்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம், 'கிரெடாய்' அமைப்பு, பிளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன், பில்டர்ஸ் அசோசியேஷன், பொறியாளர்கள், நகர் ஊரமைப்பு அதிகாரிகள் கலந்துரையாடினர். அகமதாபாத் சி.இ.பி.டி., பல்கலை வல்லுனர்கள் விளக்கமளித்தனர்.