UPDATED : அக் 08, 2026 07:10 PM
ADDED : அக் 08, 2026 06:36 PM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மதுரை நகருக்குள் அனைத்து ரோடுகளிலும் நவீன கட்டமைப்படன் பிளாட்பாரம் ஏற்படுத்த வேண்டும். குறுகலான பழங்காநத்தம், தெற்குவாசல், ராஜாமில்ரோடு பாலங்களை புதிதாக கட்ட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரஉள்ளதால், வாடிப்பட்டி முதல் சோழவந்தான், கரடிக்கல், செக்கானுாரணி வர சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். கூத்தியார் குண்டு துவங்கி எய்ம்ஸ் மருத்துவமனை வரை சாலை நடுவே தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். திருமங்கலம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். புதிய துணைத் தலைவராக முன்னாள் எஸ்.பி., மணிவண்ணன், இணைசெயலாளராக வீரமணி, உறுப்பினர்களாக செல்வா, முத்துக்குமார், மீனாட்சி சுந்தரம் நியமிக்கப்பட்டனர். வழக்கறிஞர் முத்துமணி நன்றி கூறினார்.
