/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாட்டை நாசப்படுத்தும் தாமரை வி.சி., கவுன்சிலர் சர்ச்சை பேச்சு
/
நாட்டை நாசப்படுத்தும் தாமரை வி.சி., கவுன்சிலர் சர்ச்சை பேச்சு
நாட்டை நாசப்படுத்தும் தாமரை வி.சி., கவுன்சிலர் சர்ச்சை பேச்சு
நாட்டை நாசப்படுத்தும் தாமரை வி.சி., கவுன்சிலர் சர்ச்சை பேச்சு
ADDED : ஏப் 25, 2025 01:28 AM
மதுரை:மதுரை மாநகராட்சி கூட்டத்தில், 'நாட்டை நாசப்படுத்தும் தாமரை போல' என, நாட்டின் தேசிய மலரான தாமரையை அவமதிப்பு செய்யும் வகையில் வி.சி., கட்சி கவுன்சிலர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது.
இதில், வி.சி., கட்சி கவுன்சிலர் இன்குலாப் பேசுகையில், ''நாட்டை தாமரை எப்படி நாசப்படுத்துகிறதோ, அதேபோல, வெள்ளக்கல் பகுதியைச் சுற்றியுள்ள ஆகாயத் தாமரையை அகற்றினால்தான், நீர் மாசடைவதைத் தடுக்க முடியும்,'' என்றார். அப்போது, பா.ஜ., கவுன்சிலர் பூமா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பா.ஜ., விவசாய அணி துணைத் தலைவர் சசிராமன் கூறியதாவது:
தாமரை நம் நாட்டின் தேசிய மலர். வி.சி.,யை சேர்ந்த அந்த கவுன்சிலர், 'பா.ஜ., சின்னம் தாமரை' என, குறிப்பிட்டுப் பேசியிருந்தால், அது 'அரசியல் ரீதியான விமர்சனம்' என, எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அவர் பேசத் துவங்கும்போதே, 'நாட்டை தாமரை எப்படி நாசப்படுத்துகிறதோ...' என பொதுவாக பேசியதால், அவர், தேசிய மலரை அவமதித்துள்ளார். இதை மேயர் உள்ளிட்ட யாரும் கண்டிக்காதது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

