/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பள்ளிவாசல் அலுவலகத்திற்கு வக்புவாரியம் போட்ட பூட்டு உடைப்பு ; தொடரும் சர்ச்சை

ADDED : டிச 21, 2024 05:49 AM
மதுரை : மதுரையில் நிர்வாக முறைகேடு புகார் தொடர்பாக தெற்குவாசல் பள்ளிவாசல் அலுவலகத்திற்கு வக்புவாரியம் போட்ட பூட்டு உடைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில்முஹைதீன்ஆண்டவர்புராதன தர்கா மற்றும்பள்ளிவாசல்உள்ளது.
இதன் நிர்வாகத்தின் கீழ் தெற்குவெளிவீதி மீனா நுார்தீன் புராதன தர்கா, பள்ளிவாசலும் உள்ளது.இதன் நிர்வாகிகள் மீது முறைகேடு புகார் எழுந்ததால் நிர்வாகத்தை கையகப்படுத்த வக்புவாரியம் முடிவு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதன்படி தர்கா,பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகள் வக்புவாரியத்தின் கீழ் டிச.,16ல் போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தப்பட்டது.தெற்குவாசல் பள்ளிவாசலில் உள்ள அலுவலகத்திற்கு வக்புவாரியம் பூட்டு போட்டு 'சீல்' வைத்தது.
அன்றிரவேவக்புவாரியம் போட்ட பூட்டுக்கு போட்டியாக பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் மற்றொரு பூட்டு போடப்பட்டது.பள்ளிவாசலை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பாக தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வருகிறது.
வக்புவாரியம் பூட்டு போட்டது தொடர்பாக ஐகோர்ட்டில் பள்ளிவாசல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த கோர்ட், தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தியது.
இந்நிலையில் வக்புவாரியம் போட்ட பூட்டை நேற்றுமுன்தினம் சிலர் உடைத்து அலுவலகத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வக்புவாரிய ஆய்வாளர் துங்குஅப்துல்ரசாக் புகாரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.