/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் கலெக்டருக்கு அவமரியாதை அமைச்சர் செயலால் சர்ச்சை
/
பெண் கலெக்டருக்கு அவமரியாதை அமைச்சர் செயலால் சர்ச்சை
பெண் கலெக்டருக்கு அவமரியாதை அமைச்சர் செயலால் சர்ச்சை
பெண் கலெக்டருக்கு அவமரியாதை அமைச்சர் செயலால் சர்ச்சை
ADDED : ஜன 26, 2025 04:46 AM

ஐதராபாத் : தெலுங்கானாவில், பெண் கலெக்டரை பார்த்து, உனக்கு பொது அறிவு இல்லையா என்று வருவாய்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி அநாகரிகமாக பேசியது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கரீம்நகரில் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பா.ஜ., எம்.பி., பண்டி சஞ்சய் குமார், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் வந்திருந்தனர். மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், உள்ளூர் எம்.எல்.ஏ., கங்குலா கமலர், கரீம்நகர் மேயர் ஒய் சுனில் ராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தண்ணீர் விநியோக முறையைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது,வருவாய் துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி, காவல்துறையினரால் பலமுறை ஒதுக்கித் தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து வருத்தமடைந்த அவர், கரீம் நகர் மாவட்ட பெண் கலெக்டர் பமீலா சத்பதியை பார்த்து, உனக்கு பொது அறிவு இல்லையா? என்ன செய்கிறாய்? என்ன முட்டாள்தனம்? போலீஸ் கண்காணிப்பாளர் எங்கே? என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் கலெக்டர் சத்பதி, அமைச்சர் பகிரங்கமாக கோபத்தை வெளிப்படுத்தியதால் பதற்றமடைந்தார்.
சமூக ஊடகங்களில் பலர், இந்த சம்பவம் மாநிலத் தலைவர்களின் குறைபாடுகளைக் காட்டுவதாகவும், அதிகாரப் பதவிகளில் இருக்கும் பெண்கள் நடத்தப்படும் விதம் பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் பதிவிட்டுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பமீலா, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., பட்டம் பெற்றவர். சோசியாலஜி, மனித உரிமைகள் என இரண்டு பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
பழங்குடியினர் மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில்முதுநிலை பட்டயம் பெற்றவர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் டிசைனராக பணியாற்றியவர். சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

