ADDED : மார் 08, 2026 05:37 AM

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் 31வது பட்டமளிப்பு விழா நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர்கள் சுரேந்திரன், ரங்கராஜ், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சரவணன், ஆட்சி குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், இந்திராகாந்தி, செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெருமாள், செந்தில்குமார், ராம்குமார், கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.
1148 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மகாத்மா பள்ளி குழும நிர்வாக இயக்குனர் பிரேமலதா பேசுகையில், ''வாழ்க்கையில் உயர்ந்த லட்சியம், குறிக்கோளை மனதில் கொண்டு மாணவர்கள் உழைக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிப்பு மட்டுமே வெற்றியை கொடுக்கும்'' என்றார். 54 மாணவர்களுக்கு பட்டங்களுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முதல்வர் ராமசுப்பையா உறுதிமொழி வாசிக்க, பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பொருளாதாரத் துறை தலைவர் பழனி, டீன் அழகேசன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
