நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் மகளிர் கல்வியியல் கல்லுாரி 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் கருப்பசாமி ஆண்டறிக்கை வாசித்தார். நிறுவனர் ராமராஜ், நிர்வாகிகள் லோகநாதன், சென்னகிருஷ்ணன், பெருமாள், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன், சட்ட ஆலோசகர் அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கச்சாமி 333 பேருக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''நீங்கள் கண்ட கனவை நோக்கி பயணியுங்கள். எந்த சூழலிலும் பெற்றோரை மதியுங்கள். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து பணிகளை துவக்குங்கள். அதிகமான நல்ல நண்பர்களை உங்களைச்சுற்றி இருக்குமாறு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நான்கையும் கடைப்பிடித்தால் வெற்றி பெறலாம்'' என்றார்.

