நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் சுகம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸஸ் பட்டமளிப்பு விழா நடந்தது. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் வடிவேல் முருகன் பட்டம் வழங்கினார்.
நிர்வாக இயக்குநர் வாசிமலை, களஞ்சியம் சின்னப்பிள்ளை, பத்திரிகையாளர் திருமலை, முதன்மை நிர்வாகி அகிலா தேவி, களஞ்சியம் அறக்கட்டளை திட்ட தலைவர் சிவானந்தன், மண்டல ஒருங்கிணைப்பாளர் நகுவீர் பிரகாஷ், முதல்வர் ராஜபாண்டியன், திட்டத் தலைவர் லோகமாதா கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.