ADDED : ஜூன் 17, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகர் போக்குவரத்து போலீசார் 300 பேருக்கு ராம்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கமிஷனர் லோகநாதன் வழங்கி பேசுகையில், ''போக்குவரத்து போலீசார் தங்களை வெயிலிலும், துாசியிலும் தற்காக்கும் விதமாக யு.வி., பாதுகாப்பு அடங்கிய கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. ராம்சந்திரா கண் மருத்துவமனைக்கு நன்றி'' என்றார்.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், செப்டம்பர் மாதம் போலீசாருக்கு 'ரெயின் கோட்' வழங்கப்படும். இற்கான ஏற்பாடுகள் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்றார். துணை கமிஷனர்கள் வனிதா, திருமலைக்குமார், உதவிகமிஷனர்கள் செல்வின், இளமாறன், இன்ஸ்பெக்டர் பூர்ணகிருஷ்ணன், கலந்து கொண்டனர்.