/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக்கூடாது; கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
/
ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக்கூடாது; கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக்கூடாது; கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக்கூடாது; கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
ADDED : டிச 15, 2024 07:17 AM

மதுரை : ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் தர்ணா நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் லெனின் துவக்கி வைத்தார். அனைத்து பணியாளர்கள் சங்க மதுரை தலைவர் பெரியார்பாண்டியன் தலைமை வகித்தார்.
கூட்டுறவு ஊழியர் சம்மேளன நிர்வாகி துரைசாமி முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சர்வேசன், துணைத் தலைவர் ராஜகேசி, மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம் பேசியதாவது:
கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சம்பள உயர்வு 20 சதவீதமாக இருந்ததை தி.மு.க., ஆட்சி 15 சதவீதமாக குறைத்து விட்டது.
நிறைய மாவட்டங்களில் 'அரியர்' தொகை வழங்கவில்லை. பணியாளர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற சலுகைகளை பறிக்கக்கூடாது. நகர வங்கி ஊழியர்களின் ஊதிய பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 2016, 2021 ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கவில்லை. அதிகாரிகள் வைத்தது தான் சட்டமாக உள்ளது. கூட்டுறவு வங்கிகளை தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 11 சென்னையிலும், 14ல் மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஜன., முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
புதிய ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது, பணியாளர்களுக்கான 20 சதவீத தீபாவளி போனஸில் மீதமுள்ள 10 சதவீதத்தை வழங்குவது, உதவி மேலாளர்களை சரக மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்வது, அனைத்து கிளைகளிலும் மகளிருக்கு தனி கழிப்பிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணைமேயர் நாகராஜன், அனைத்து பணியாளர்களின் சங்க மதுரை செயலாளர் ராஜமாணிக்கம், பிற மாவட்ட நிர்வாகிகள் கடல்கண்ணன், ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.