/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் கூட்டுறவுத்துறையில் கோரிக்கை
/
ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் கூட்டுறவுத்துறையில் கோரிக்கை
ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் கூட்டுறவுத்துறையில் கோரிக்கை
ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் கூட்டுறவுத்துறையில் கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 05:28 AM
மதுரை: பென்ஷன் திட்டம் இல்லாத கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக அதிகரிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கப் பதிவாளர் நந்த குமாரிடம் கோரிக்கை வைத்ததாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கூட்டுறவுத்துறையின் கீழ் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், எடையாளர்கள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர் களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
2022 முதல் 2025 வரையான ஆண்டுகளுக்கு அரசு வழங்க வேண்டிய மானியத்தொகை ரூ.750 கோடி நிலுவையில் உள்ளது. இத்தொகை விடுவிக்கப்படாததால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நிர்வாகச் செலவினங்களை சமாளிக்க முடியவில்லை.
புதிதாக தொடங்கப் பட்ட தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒரு கார்டுக்கு ரூ.36 வழங்கப்படுகிறது. அத்தொகையை ரூ.60 ஆக அதிகரிக்க வேண்டும்.
பென்ஷன் திட்டம் இல்லாத கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக அதிகரிக்க வேண்டும். ரேஷன் கடைகளை கூட்டுறவுத் துறை நிர்வாகிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவாளரிடம் மனு வழங்கியுள்ளோம் என்றார்.

