தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மல்லி, மிளகாய் சாகுபடி பயிற்சி

 மல்லி, மிளகாய் சாகுபடி பயிற்சி

 மல்லி, மிளகாய் சாகுபடி பயிற்சி


ADDED : மார் 11, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாக்கு மற்றும் வாசனைப்பயிர்கள் மேம்பாட்டு இயக்குனரகம் சார்பில் விவசாயிகளுக்கு கொத்தமல்லி, மிளகாய் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.

மிளகாய், கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை முதல்வர் சந்திரமணி வெளியிட, தோட்டக்கலைத் துறைத் தலைவர் ராஜமாணிக்கம் பெற்றார்.

சந்திரமணி பேசுகையில், '' உழவர் உற்பத்தியாளர் சங்கம் அமைத்து கொத்தமல்லி, மிளகாயை விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம். தொழில்முனைவோராக மாற்றுவதே இப்பயிற்சியின் நோக்கம்'' என்றார்.

வேளாண் விரிவாக்கத்துறைத் தலைவர் பேராசிரியர் வேலுசாமி பேசுகையில், 'பசுமைக் குடிலில் இலை உற்பத்திக்கான கொத்தமல்லியை கோடை காலத்தில் சாகுபடி செய்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம்'' என்றார். மிளகாய், கொத்தமல்லியின் முக்கியத்துவம், பயன்கள், உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருள்மணி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us