/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அக்.21 முதல் வேலை நிறுத்தம்
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அக்.21 முதல் வேலை நிறுத்தம்
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அக்.21 முதல் வேலை நிறுத்தம்
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அக்.21 முதல் வேலை நிறுத்தம்
ADDED : அக் 08, 2025 03:30 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்த 23 தொழிலாளர்களைமீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி துாய்மை பணியாளர் சங்கங்கள் சார்பில் தீபாவளி மறுநாளான அக்.21 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு., பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
அவர்கூறியதாவது: துாய்மை பணியை ஒப்பந்தஅடிப்படையில் 'அவர் லேண்ட்'நிறுவனம் மூன்றுஆண்டுகளுக்கு மதுரை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 22 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் கணக்கில் வராத ரூ500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அந்நிறுவனம் கொள்ளையடித்துள்ளது. இதில் ரூ.6 கோடி அளவில் கையாடல் நடந்துள்ளது.ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் கணக்கில் வர வேண்டிய வருங்கால வைப்பு நிதி ரூ.70 ஆயிரத்தை கையாடல் செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தைரத்துசெய்ய வேண்டும்.சம்பளம்,பணிப்பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக23 துாய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி துாய்மைபணியாளர் சங்கங்கள் சார்பில் அக்.21 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. பம்பிங் ஸ்டேஷன், பாதாள சாக்கடை பணியாளர்கள் உள்ளிட்டஅனைத்து தொழிலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்றார்.
மாவட்டதலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, வி.சி., சங்க நிர்வாகிகள் முத்து, பூமி நாதன் உடன் இருந்தனர்.