நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடந்தது. சட்ட ஆலோசகர் பீர் முகமது வரவேற்றார்.
தலைவர் தவமணி தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் ஆண்டறிக்கை, பொருளாளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கையை வாசித்தனர். ஓய்வூதியர்களின் மறைவுக்கு பிறகு வாரிசுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவப்படியை ரூ.300-ல் இருந்து ரூ.ஆயிரமாக உயர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் துரைராஜ், கவுரவ தலைவர் ராமையா, இணைச் செயலாளர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.