/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவுன்சிலர்கள் - அலுவலர்களுக்கு இடையே 'டிஸ்யூம்': முற்றுப்புள்ளி வைப்பார்களா மேயர், கமிஷனர்
/
கவுன்சிலர்கள் - அலுவலர்களுக்கு இடையே 'டிஸ்யூம்': முற்றுப்புள்ளி வைப்பார்களா மேயர், கமிஷனர்
கவுன்சிலர்கள் - அலுவலர்களுக்கு இடையே 'டிஸ்யூம்': முற்றுப்புள்ளி வைப்பார்களா மேயர், கமிஷனர்
கவுன்சிலர்கள் - அலுவலர்களுக்கு இடையே 'டிஸ்யூம்': முற்றுப்புள்ளி வைப்பார்களா மேயர், கமிஷனர்
ADDED : பிப் 17, 2024 05:27 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் வார்டு குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் - அலுவலர்களுக்கு இடையே நிலவும் முட்டல் மோதல் போக்குகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் கமிஷனர் தினேஷ்குமார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வார்டுகளில் குப்பை, சாக்கடை, பாதாளச் சாக்கடை உடைப்பு, குடிநீர் வினியோகம், ஆக்கிரமிப்பு, கால்வாய் துார்வாருதல், தெரு விளக்கு எரியாத நிலை உள்ளிட்ட மக்களை பாதிக்கும் ஏராளமான பிரச்னைகள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் தெரிவிக்கப்படுகின்றன.
இப்பிரச்னைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களிடம் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் போது 'பணிகளை செய்யாமல் இழுத்தடிப்பதாக கவுன்சிலர்களும், பணிகளை மேற்கொள்ள உரிய உபகரணங்கள், தொழிலாளர்கள் இல்லை' என அலுவலர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகின்றனர். இதனால் இருதரப்பினருக்கும் காரசார வாக்குவாதம் ஏற்படுகின்றன.
கடைசி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் பேசும்போது அவருக்கு ஆதரவாக ஆண் கவுன்சிலர் எழுந்து அலுவலர்கள் மீது குற்றம்சாட்டினார். அப்போது அவர் ஒருமையில் பேசியதால் கூட்டத்தில் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை மேயர், கமிஷனர் அமைதிப்படுத்தினர்.
இதுபோல் மற்றொரு கூட்டத்தில் சுகாதாரப் பிரிவு தொடர்பான புகாருக்கு அதிகாரி பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்த தி.மு.க., கவுன்சிலர், 'வேலையில் விருப்பம் இருந்தால் பாருங்க, இல்லையென்றால் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வேறு மாநகராட்சிக்கு ஓடிவிடுங்க' என வெளிப்படையாக அதிருப்தியானார்.
இதுபோன்ற பிரச்னைகள் ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும் எதிரொலிக்கிறது.
மேலும் 'பணிகள், ஆய்வு தொடர்பாக வார்டுக்குள் மாநகராட்சி அலுவலர்கள் செல்லும்போது கவுன்சிலர்களிடம் தெரிவிப்பதில்லை' எனவும் ஒவ்வொரு கூட்டத்திலும் குற்றச்சாட்டு எழுகிறது. அப்போது மேயர் 'கண்டிப்பாக கவுன்சிலர்களிடம் தெரிவித்து விட்டு தான் வார்டுக்குள் அலுவலர்கள் செல்ல வேண்டும்' என அலுவலர்களுக்கு உத்தரவிட்டும் இப்பிரச்னை தொடர்கின்றன. இதுபோன்ற முட்டல் மோதல் தொடராமல் இருக்க மேயர், கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.