ADDED : பிப் 07, 2024 07:09 AM
அ நிறம் | அளவு
பேரையூர் : டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 13 தி.மு.க., 2 சுயேட்சை கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த முத்துகணேசன் சேர்மனாக உள்ளார். நேற்று பேரூராட்சி கூட்டத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் 9 பேர், சுயேச்சைகள் 2 பேர் புறக்கணித்தனர்.
அவர்கள் கூறியதாவது: இங்கு கண்காணிப்பு கேமரா இருந்தும் செயல்படாமல் உள்ளது. 11 பெண் கவுன்சிலர்கள் உள்ளோம். அடிக்கடி அடிதடி நடப்பதால் பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்றனர்.
