/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவுன்சிலர்கள் கூட்டம் அ.தி.மு.க., புறக்கணிப்பு
/
கவுன்சிலர்கள் கூட்டம் அ.தி.மு.க., புறக்கணிப்பு
ADDED : அக் 26, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் வேட்டையன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் இந்திரா, கமிஷனர்கள் செந்தில்மணி, பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர். கூட்டத்தை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
கவுன்சிலர் முருகன் கூறுகையில், ''ஒவ்வொரு கூட்டத்திலும் எங்கள் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கிறோம். வளர்ச்சி திட்ட பணிகள், அடிப்படை பணிகள் நடக்கவில்லை. கூட்டத்திற்கு வருவது இனிப்பு, காரம், டீ சாப்பிடுவதற்காக மட்டுமே என்றாகிவிட்டது. அதனால் புறக்கணித்தோம்'' என்றார்.