/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
/
மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 17, 2024 07:30 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம், நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவு கோவில் உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது கற்சிலைகள் சேதமடைந்தன. இதற்கு பதிலாக புதிய சிலைகள் நிறுவ அனுமதிக்க தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், சிவகங்கை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'அதே இடத்தில் வெண்கல சிலைகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்க மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, விவாதம் நடந்தது.
நீதிபதிகள், 'சிலைகள் உள்ள அதே இடத்தில் வெண்கல சிலைகளை நிறுவ மனுதாரர் விண்ணப்பிக்கலாம்.
சட்டத்திற்குட்பட்டு தகுதி, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்ததிலிருந்து ஆறு மாதங்களில் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.

