ADDED : ஆக 06, 2026 12:43 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம்: டி.கல்லுப்பட்டி பகுதியில் 2013ல் நடந்த கொலை முயற்சி வழக்கின் விசாரணை திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகர் முன்னிலையில் நடந்து வருகிறது. கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டராக இருந்த பாதமுத்து ஆஜராகி வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
தற்போது இன்ஸ்பெக்டராக உள்ள குருநாதன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அடுத்த வாய்தாவிற்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.
