ADDED : மார் 01, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் படித்துறை தெருவை சேர்ந்த மணி மனைவி காளியம்மாள் 70. இவரது பசுமாடு அங்கிருக்கும் 'டிரான்ஸ்பார்மர்' அருகே நின்றிருந்தது.
அப்போது உயர் மின்னழுத்த கம்பிகளில் அணில்கள் சென்றதால் கம்பிகள் உரசி உயர் மின்னோட்டம் டிரான்ஸ்பார்மரின் எர்த் கம்பி வழியாக சென்றதில் அருகே நின்ற மாட்டின் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
கன்றை ஈன்ற 1 வாரத்திலேயே தாய் பலியானது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
