/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியில் மாடுபிடி வீரர்கள் பயிற்சி
/
அவனியில் மாடுபிடி வீரர்கள் பயிற்சி
ADDED : ஜன 10, 2026 07:41 AM
அவனியாபுரம்: தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் ஜன. 15ல் நடக்கிறது. காளையர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க காளைகளுக்கும், காளைகளை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அங்கு 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். அவனியாபுரம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுகின்றனர்.
மாடுபிடி வீரர்கள் வேகமாக நடத்தல், ஓட்டம், நீச்சல், மூச்சுப் பயிற்சிகள், இளவட்டக்கல் துாக்குதல், கயிறு தாண்டுதல் உட்பட பயிற்சிகளை நேற்றுமுன்தினம் முதல் துவக்கி உள்ளனர். பலர் மாதிரி வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்கும் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

