தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விரகனுார் மதகு அணை தடுப்புச்சுவரில் விரிசல்

விரகனுார் மதகு அணை தடுப்புச்சுவரில் விரிசல்

விரகனுார் மதகு அணை தடுப்புச்சுவரில் விரிசல்


ADDED : மே 04, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-மதுரை : மதுரை விரகனுார் வைகை ஆற்றின் மதகு அணை ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றுள்ளது. மேலும் அணையின் பாலத் தடுப்புச் சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த அணை 1975ல் கட்டப்பட்டது. இதன் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரோடு வழியாக சக்கிமங்கலம், கல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். தடுப்பணையாக உள்ள இந்த அணை மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் பயன்பெறுகின்றன.

நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள அணையின் மேற்பகுதி ரோடு சேதமடைந்து வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து செல்கின்றனர். அணையின் இருபுறமும் உள்ள தடுப்புச் சுவரும் விரிசல் விட்டு கம்பிகள் தெரிகின்றன. சிறுவர்கள் எட்டிப் பார்க்கும்போது தவறி விழும் ஆபத்து உள்ளது.

மேலும் அணையில் எட்டிய துாரம் வரை ஆகாயத்தாமரை படர்ந்து ஆற்றையே மூடியுள்ளது. தவிர முன்பு பள்ளி மாணவர்களின் சுற்றுலா இடமாக இருந்த பூங்கா புதர்மண்டி காணப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us