ADDED : மார் 30, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏட்டு முத்துக்குமார் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று உசிலம்பட்டி தி.மு.க., நிர்வாகிகள் ரூ.5 லட்சம் நிவாரணமாக தந்தனர். அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஏட்டு சொந்த ஊரான கள்ளபட்டி மயானத்தில் விருதுநகர் எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.