UPDATED : ஜூன் 20, 2026 06:37 PM
ADDED : ஜூன் 20, 2026 06:21 PM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார், தனியாமங்கலம், கீழையூர், பெருமாள்பட்டி பகுதியில் ஜூன் 19 இரவு சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. தனியாமங்கலத்தில் 75 மி.மீ., மழை பதிவானது. இதில் சுந்தர்ராஜன், மஞ்சமலை உள்ளிட்ட விவசாயிகளின் தென்னை, வாழை, கரும்பு பயிர்கள் சாய்ந்தன. பெருமாள்பட்டியில் மரங்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்து விழுந்ததால் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.
விவசாயிகள் கூறியதாவது : ஓரிரு மாதத்தில் வாழைத்தார் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் வாழை மரம் சாய்ந்தது. கரும்பு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவு செய்த கரும்புகள் சாய்ந்ததால் கடனை கட்ட வழிதெரியாமல் உள்ளோம். வேளாண், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கடன்களை தள்ளுபடி செய்வதோடு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
