/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கலாசார மையம் தேவை; சவுராஷ்டிரா பிரமுகர்கள் கவர்னரிடம் மனு
/
மதுரையில் கலாசார மையம் தேவை; சவுராஷ்டிரா பிரமுகர்கள் கவர்னரிடம் மனு
மதுரையில் கலாசார மையம் தேவை; சவுராஷ்டிரா பிரமுகர்கள் கவர்னரிடம் மனு
மதுரையில் கலாசார மையம் தேவை; சவுராஷ்டிரா பிரமுகர்கள் கவர்னரிடம் மனு
ADDED : பிப் 12, 2025 04:28 AM
மதுரை : 'சிறுபான்மை மொழி, கலாசார வளர்ச்சிக்காக சவுராஷ்டிரா மையத்தை மதுரையில் துவக்க வேண்டும்' என, சவுராஷ்டிரா பிரமுகர்கள் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.
மத்திய மனித வளத்துறை அமைச்சகம் சிறுபான்மை மொழி வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் சிறுபான்மை மொழி வளர்ச்சி மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் சவுராஷ்டிரா மொழி, கலாசார வளர்ச்சிக்காக ஒரு மையத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து பல்வேறு சவுராஷ்டிரா அமைப்புகள் இணைந்து, சென்னை இட்காட் முன்னாள் நிர்வாக இயக்குனர் சோமி நாகேஸ்வரன் ஏற்பாட்டில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தன. அக்கடிதத்துடன், அம்மையத்திற்காக பரிந்துரை செய்யும்படி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
இக்குழு உறுப்பினர்களான சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் ராஜேந்திரன், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் மூத்த தலைவர் பாலா வி குட்டி, தலைவர் கே.கே.தினேஷ், 'கமாதகா' யுனைடெட் சவுராஷ்டிரா அசோசியேஷன் தலைவர் வி.ஜி.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீதரன், பொருளாளர் கே.கே.தேவதாஸ், சென்னை சவுராஷ்டிரா சபை தலைவர் ஜெ.ஆர்.ரமேஷ், மும்பை சவுராஷ்டிரா சபை தலைவர் ஜெ.பாலசுப்ரமணியன், கீதா பவனம் துணைத் தலைவர் பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன் பாபு, வழக்கறிஞர் எம்.டி.பூமாச்சாரி ஆகியோர் மனு கொடுத்தனர்.

